ESWT என்றால் என்ன?
இது நிரூபிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான மற்றும்
சிறந்த சிகிச்சை ஆகும். அறுவைசிகிச்சையின்றி நமது தசைகள் மற்றும் மூட்டுகளில்
ஏற்படும் நாட்பட்ட பிரசினைகளுக்கான சிறந்த தீர்வாகும்.
பொதுவாக சிகிச்சைசெயப்படும் இடங்கள்:
இந்த சிகிச்சை எவ்வாறு வேலை செய்கிறது?
· உடம்பின் நரம்புகளை சரியான விகிதத்தில் இயக்குவதால் வலி குறைக்கப்படுகிறது.
· குறிப்பிட்ட இடத்தில் தேவையான வேதியல் மாற்றத்தை உருவாக்குகிறது.
· இந்த வேதியல் மாற்றம் மூலம் வலி மற்றும் மூட்டு பிரச்சினைகள் குறைக்கப்படுகிறது.
· தசைகள் மற்றும் மூட்டுகளில் படிந்துள்ள தேவையற்ற கால்சியத்தை (calcium deposits) நீக்குகிறது.
· இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பாதிக்கப்பட்ட திசுக்களை பழைய நிலைமைக்கு கொண்டு செல்கிறது.
எதற்காக இந்த முறை சிகிச்சையை பயன்படுத்த
வேண்டும்?
· துரிதமானது மற்றும் சிறந்தது.
· அறுவைசிகிச்சையின் பின்னடைவு தவிர்க்கப்படுகிறது.
· அறுவைசிகிச்சையைவிட இதன் வெற்றி விகிதம் அதிகம்.
· பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தேவையற்ற மருந்துகளைத் தவிர்க்கலாம்.
· மற்ற சிகிச்சைமுறைகள் தோல்வி அடையும்போது இதை பயன்படுத்தலாம்.
· சிகிச்சை எடுக்கு ம் காலங்களிலும் நோயாளிகள் விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.
இது எவ்வளவு துரிதமாக செயல்படுகிறது?
· பல நோயாளிகள் முதல் சிகிச்சை முடியும்போதே குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைக் காண இயலும். ஒரு சிலருக்கு பாதிப்பின் அளவைப்பொறுத்து மூன்று சிகிச்சைகள் வரை தேவைப்படலாம்.
· சிகிச்சை முடிந்த பிறகும் உள்ளே உள்ள திசுக்கள் தொடர்ந்து சீரடைவதால் சிலருக்கு சிகிச்சையை நிறுத்திய பிறகும் 12 வாரங்கள் வரை முன்னேற்றம் தொடரும்.
எங்களது மருத்துவ மையத்தில் சிறந்த அனுபவமுள்ள மருத்துவர்களால் மூல காரணத்தை கண்டறிந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.




No comments:
Post a Comment