தசை நாண் வீக்கம் என்றால் என்ன?
தசைநாண்கள் இயல்புக்கு மாறான அதிக விசையால்
பாதிப்படையும்போது உள்ளே ஏற்படும்
இரத்தக்கசிவால் வீக்கமடைகின்றன.
தசை நாண் என்றால் என்ன?
தசை நாண் என்பது எலும்பையும் தசையையும் இணைக்கும் நார் போன்ற அமைப்பாகும். இதன்
அமைப்பு உறுதியாயும், வளையும் தன்மையுடையதாயும் இது அதிக அழுத்தத்தை
தாங்கவல்லது.
தசை மற்றும் தசைநாண்களின் கூட்டு
செயல்ப்பாட்டால் எலும்பு மற்றும் மூட்டுகளில் அசைவு விசை உண்டாகிறது.
தசைநாண் மற்றும் அதில் ஏற்படும் காயங்களின்
அடிப்படை அறிவியல் என்ன?
தசைநாண் என்பது அடிப்படையில் ஒரு இறுகிய நார்
போன்ற அமைப்பு. இது கொலாஜென் (collagen) என்ற ஜவ்வு
போன்ற உட்பொருளால் ஆனதாகும்.
தசை நாண்கள் ஒரு குறிப்பிட்ட அளவு
நெகிழும்தன்மை மற்றும் உறுதி கொண்டதுமாகும். அவற்றின் கட்டமைப்பு கீழே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளது.
அவை இணை நார்களால் (parallel fibres) உருவாக்கப்பட்டுள்ளது.
தசை நாண் உள்கட்டமைப்பு
காயம் ஏற்படும்போது என்னவாகிறது?
படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இணை நார்கள்
தங்களது சமநிலையை இழந்துவிடுகிறது. அதனால் எலும்பு மூட்டு அசைவில் மிக குறைந்த
விசையே கொடுக்கமுடிகிறது. இக்காரணங்களால் உள்வீக்கம் ஏற்பட்டு, தசையின் அழுத்தம் அதிகரித்து தசை பலவீனமடைகிறது.
இந்த நிலையில் நோயாளிக்கு என்ன நேர்கிறது?
- · மிதமான முதல் அதிகப்படியான வலி அல்லது வீக்கம்.
- · அதிகாலை தசை மற்றும் மூட்டு இறுக்கம்
- · முறையான சிகிச்சை இல்லையெனில் அது நாளடைவில் தசையின் அளவைக்குறைத்து அதன் செயல்ப்பாட்டைக் குறைத்துவிடுகிறது.
முதலுதவி:
பனிக்கட்டி வைத்து காயம்பட்ட இடத்தை
குளுமைப்படுத்துதல் மற்றும் ஓய்வு அளித்தால். சிறிய காயங்கள் இரண்டு முதல் நான்கு
வாரங்களில் குணமடையும்.
சிகிச்சைகள்:
- · தசையின் அழுத்தத்தைக்குறைக்க TENS therapy
- · LASER கொலாஜென்ஐ (collagen) குணமாக்க சிறந்த சிகிச்சை
- · Taping
Newzone மருத்துவமையத்தில் முழுமையான சிகிச்சை
அளிக்கப்படுகிறது. மேலும் உங்களது எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க எங்களை
தொடர்புகொள்ளுங்கள்.





No comments:
Post a Comment