முதுகெலும்பு மற்றும் அதன் செயல்பாடு கேள்வி-பதில்
முதுகெலும்பின் முக்கியத்துவம் என்ன?
மனித முதுகெலும்பு மற்றும் அதனுள் இருக்கும்
நரம்பு மண்டலம் நமது மொத்த உடலை இயக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மூளையிலிருந்து வரும் உத்தரவை செயல்படுத்தும் ஓர் முக்கிய பங்காற்றுகிறது.
இக்காரணிகளால் அதன் அமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை இயல்பான மற்றும் ஆரோக்கியமான
வாழ்வுக்கு இன்றியமையாததாகும்.
ஆரோக்யமான முதுகெலும்பு என்றால் என்ன?
ஆங்கில “S” வடிவிலான வளைவுடன் கூடிய அமைப்பு மற்றும்
இயல்பான அசைவு, வளையும் தன்மை கொண்டிருத்தல் ஒரு ஆரோக்கியமான
முதுகெலும்பாகும். இந்த சமநிலையை கொண்டிருப்பதற்கு அதைச் சுற்றியுள்ள தசைகள்,
ஜவ்வுகள் மற்றும் வயிற்றின் அழுத்தம் ஆகியவை முக்கிய
பங்காற்றுகின்றன.
ஆரோக்கியமற்ற நிலை எவ்வாறு அறியப்படுகிறது?
“S”வடிவிலான வளைவு சமநிலையை இழந்து, குறிப்பிட்ட எலும்பிலோ அல்லது மொத்த முதுகெலும்பிலோ மாற்றம்
பெற்றிருக்கும். இது தசை மற்றும் நரம்பின் செயல்பாட்டில் மாற்றம் செய்து வலி
அல்லது செயல்பாட்டுக் குறைப்பாட்டை ஏற்படுத்தியிருக்கும்.
இதன் அறிகுறிகள் என்ன?
சாதாரண அல்லது சகிக்க முடியாத முதுகுவலி
ஏற்படலாம். உணர்வு குறைபாடு அல்லது உடல் செயல்ப்பாடுக்குறைபாடு உண்டாகலாம். ஒரு
சிலருக்கு இது டிஸ்கில்
(Disc) அழுத்தத்தை அதிகப்படுத்தி காயம்
ஏற்படுத்தலாம்.
டிஸ்க் பிரச்சினைக்கான காரணம் என்ன?
சமநிலையை விட்டு விலகிய ஒரு முதுகு மூட்டு
அல்லது அசாதாரணமான வயிற்று அழுத்தம்(Intra-abdominal pressure)
டிஸ்கின் உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பொருளை பாதிப்படைய செய்யும். நம்முடைய அமரும்
உறங்கும் நிலை அல்லது வேலையின் பளு ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.
இந்தப்பிரச்சினைக்குப் பின் நம் உடலின் உள்ளே
நிகழும் மாற்றம் என்ன?
பேசியா(Fascia) என்பது தசை, இரத்தநாளங்கள்
மற்றும் உள் உறுப்புகள் ஆகியவற்றை சுற்றியிருக்கும் ஒரு பாதுகாப்பு அம்சம். அது
மெல்லிய தசை போன்ற ஓர் அமைப்பு. இது முதுகெலும்பு பிரச்சினைகளில் தன் இயல்பு
நிலையை இழந்து மாற்றம் அடைகிறது. அதனால் இரத்த ஓட்டக் குறைபாடு மற்றும்
குறிப்பிட்ட செயல்பாட்டில் சிரமங்களைச் சந்திக்க நேருகிறது. இதன் இறுக்கம் மற்றும்
நெகிழ்ச்சி குறைவு காரணமாக நாளடைவில் ஆரம்ப்பநிலை முதுகெலும்புப் பிரச்சினை நீண்ட கால
வேதனையாக மாறுகிறது.
இதன் சிகிச்சைகள் என்ன?
எங்களது நியூஸோன் மருத்துவமனையில் நாங்கள்
நோயாளியின் அசைவு, வலியின் அளவு ஆகியவற்றைப் புரிந்துகொண்டு, ஓவ்வொரு
நோயாளியின் பேசியா(Fascia) இருக்கம் சரியாகி சமநிலையை அடையும் சிகிச்சைகள் மேற்கொள்கிறோம். சில
எளிய உடல் பாங்குகள் சரி செய்வது, சிறிய லகுவான பயிற்சிகள் முதல், உள் காயங்களுக்கான லேசர்(LASER) மற்றும் முதுகு டிஸ்க், மூட்டுகளை
அதன் அழுத்தத்திலிருந்து விடுபட
ITO Spinal Decompression கருவி
மூலம் வேதனையற்ற, பக்கவிளைவற்ற சிகிச்சையை மேற்கொள்கிறோம். இது
குறுகிய கால அளவில் நல்ல முன்னேற்றத்தைத் தருகிறது.
முதுகெலும்பைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:
- · தினமும் சிறிய எளிய உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும். நடப்பது, நீந்துவது நல்ல பயிற்சிகளாக அறியப்பட்டுள்ளன.
- · நாம் அமரும் நிலை மிக முக்கியமான ஓன்று. இருக்கும் இருக்கை சமநிலையுடன் இருத்தல் மிக அவசியம்.
- · அதிக நேரம் கணினி முன் அமருபவரானால் இருக்கும் இருக்கையையும் மேசையையும் சரியான விகிதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிக அவசியம் (படத்தைப்பார்க்க).
- · முழுவதுமாக குனிந்து அதிக எடை உள்ள பொருளை தூக்குவதால் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி முதுகு பிரச்சினைகளுக்கு வழிவகைச்செய்யும்.
- உறங்கும் போது போர்வைகள் உடலுக்கு அடியில் சிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். படுக்கை சமநிலையுடன் இருத்தல் நல்லது







No comments:
Post a Comment