முழங்கால் மூட்டுக்கான சிகிச்சைகள்- கேள்வி
பதில்
முழங்கால் மூட்டின் செயல்பாடுகள் என்ன?
அதிகப்படியான தசைகளும் ஜவ்வுகளும் கொண்ட ஒரு
கூட்டமைப்பே நமது முழங்கால் மூட்டாகும். உடல் சுமை தாங்குதல் மற்றும் நடக்க
உதவுவது இதன் அடிப்படை செயல்பாடு ஆகும். மூட்டுகளின் உள் உராய்வு மற்றும் அசைவு
இதன் மிக முக்கிய செயல்பாடு ஆகும்.
மூட்டுக்காயங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன?
அதிர்வு தரும் சுமை மற்றும் சமநிலையற்ற
அழுத்தநிலை ஆகிய காரணங்களால் மூட்டுக்காயங்கள் ஏற்படுகின்றன. அது சிறிய அழுத்தம்
முதல் ஜவ்வு, டிஸ்க்(meniscus) கிழிதல் போன்ற அளவில் காயம் ஏற்படுத்துகிறது.
பொதுவாக செய்யப்படும் சிகிச்சைகள் என்ன?
வலி நிவாரண மருந்து, களிம்பு,
ஊசி போன்றவை அல்லது சூடு ஓத்தடம் ஆகிய முறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்த முறைகள் சிலருக்கு வலி, வேதனையைக் குறைத்தாலும் உண்மையான காரணி
கண்டறியப்படாததால் நீடித்த வலி அல்லது செயல்பாட்டுக் குறைவு போன்ற
பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
நியூஸோன் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் என்ன?
மூலக்காரணம் கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தவாறு
நோயாளிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மூட்டின் உள் அசைவுகள் (Arthrokinematics)
நமது மூட்டுகளின் உள் அசைவுகள் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தவை. சமநிலையற்ற உள் அசைவு ஜவ்வு, தசைநாண்
இறுக்கம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கி பின்னர் நிரந்தர மூட்டு
வலி மற்றும் செயல்பாட்டுக் குறைவை ஏற்ப்படுத்தும். இதை சரி செய்ய குறிப்பிட்ட
தசைகளைத் தூண்டி உள் அசைவின் சமநிலையை ஏற்ப்படுத்தும் சிகிச்சைகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
முதலுதவி
- · காயம் பட்டவுடன் மூட்டின் அசைவை நிறுத்தவும்.
- · வலி, வீக்கம், உள்ளே ஏற்படும் ரத்தகக்கசிவை நிறுத்த பனிக்கட்டி ஒரு 15 நிமிடம் வைக்கவும்.
- · ஓரளவு இறுக்கமாக கட்டிட்டு மூட்டுக்கு சிறிது கீழே வரை கட்டவும்.
- · காலை உயர்த்தி வைக்கவும்.
ESWT
கருவி மூலம் தேவையற்ற இடங்களில் படிந்துள்ள
கால்சியம் அகற்றப்பட்டு அசைவு
சீர்செய்யப்படுகிறது.
LASER
பக்கவிளைவற்ற லேசர்(LASER)
கருவி மூலம் காயங்கள் சீர் செய்யப்படுகின்றன. Class 3B LASER காயம்பட்ட இடத்தை
மட்டும் சரிசெய்வதால் உடல் செயல்பாட்டிற்கு இது பக்கவிளைவுகள் உண்டாக்குவதில்லை.







No comments:
Post a Comment